×

டெல்லி அவசர சட்ட மசோதா கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேச்சு

டெல்லி அவசர சட்ட மசோதா கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் என திமுக எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட மசோதாவின் மீது திமுக எம்.பி., திருச்சி சிவா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

இந்த மசோதாவை கொண்டுவர அவசியம் என்ன?

உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் டெல்லி அவசர சட்ட மசோதா உள்ளது. மாநிலத்திற்கு முழு அந்தஸ்து வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டெல்லி அவசர சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமின்றி, அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

மாநில அரசை செயல்பட விடுவதில்லை:

மாநில அரசுகள் எதிர்கட்சிகளால் ஆளப்படும் போது, ஆளுநர்களால் இடையூறு செய்யப்படுகின்றன. யூனியன் பிரதேசமாக இருந்தால், துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசை செயல்பட விடுவதில்லை என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா சாடினார்.

அதிகாரங்கள் மத்திய அரசிடமே குவிக்கப்படுகிறது:

அதிகாரங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் மத்திய அரசிடமே குவிக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு அறியப்பட்ட இந்தியாவில், இன்று அனைத்தும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன என திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

The post டெல்லி அவசர சட்ட மசோதா கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dishaghagam ,Trichi Shiva ,Trichy Shiva ,
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...