
சென்னை: பொதுத்தேர்தல் மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது. ராகுல் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் எம்.பி. பதவி நீக்கத்தை திரும்பப் பெற இவ்வளவு தாமதமா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகமும் உச்சநீதிமன்ற ஆணையும் முறைப்படி மதிக்கப்பட வேண்டாமா? ஜனநாயக நெறிமுறைகளை, அரசியல் நாகரிகப் பண்புகளின் குரல்வளையை நெரிக்கலாமா? என்றும் கி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.
மக்கள் முட்டாள்கள் அல்ல; எதையும் அமைதியாக கவனித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் வைப்பார்கள். மக்களின் முடிவு என்ன என்பதற்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவே அண்மைக்கால அரசியல் உதாரணம். மக்கள் மட்டுமல்ல, உலகமும் இந்திய ஜனநாயகக் கூத்துகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று கி.வீரமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
The post பொதுத்தேர்தல் மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்: தி.க.கி.வீரமணி சாடல் appeared first on Dinakaran.