×

மத மோதலை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆடியோ பதிவு: புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத மோதலை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆடியோ பதிவிட்டதால் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சர்ச்சையாக பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது. பாஜக யாத்திரையை விமர்சிக்கும் பாடலை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்ட நண்பரை மிரட்டும் வகையில் ராஜேந்திரன் ஆடியோ பதிவிட்டது.விசாரணையில் தெரியவந்தது. இந்தியாவில் ராமராஜ்ஜியம் நடக்கும் என்றும் அதனை விரும்பாத கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் பேசியுள்ளார்.

The post மத மோதலை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆடியோ பதிவு: புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Puliantopu Traffic Investigation Division ,CHENNAI ,Rajendran ,Puliantoppu Traffic Investigation Division ,Pulyantopp Traffic Investigation Division ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை