×

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் வெள்ளம்: ஆற்றங்கரையோரம் இருந்த வீடு அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பனிப்பாறை அணையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடு அடித்து செல்லப்பட்டது. ஆற்றின் குறுக்கே பனிப்பாறை உருவாகும் போது நீரின் ஓட்டம் தடைபட்டு பனிப்பாறை அணைகள் உருவாகின்றன. உலகம் முழுவதும் இந்த இயற்கை அணைகள் பல இருக்கின்றன. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் ஓடும் மென்டன்ஹால் ஆற்றின் குறுக்கே இதுபோன்றதன் அணை இருந்தது. அந்த ஆற்று நீரின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பனிப்பாறை முற்றிலுமாக உடைந்து வெள்ளம் ஏற்பட்டது.

மென்டன்ஹால் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோரப் பகுதிகளில் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அங்கிருந்த வீடு ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்கும். ஆனால், இதுபோன்ற பனிப்பாறையால் ஏற்படும் வெள்ளம் திடீரென ஏற்படுவதால் அதிக வேகத்துடன் செல்லும் என புவியியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதன் பாதிப்பும் அதிகம் இருக்கும். புவி வெப்பமடைதல் குறித்த நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுடன் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வரும் ஆர்வலர்கள் வரும் நாட்களில் இதுபோன்ற சீற்றங்கள் அதிகம் இருக்கும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் வெள்ளம்: ஆற்றங்கரையோரம் இருந்த வீடு அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Alaska, US ,Washington ,Glacier Dam ,United States ,Alaska region ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...