×

உலக மகளிர் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி: நடப்பு சாம்பியன் அமெரிக்கா அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலியா: உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. 9வது மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்பனில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனான அமெரிக்கா சுவீடன் அணியை எதிர் கொண்டது. தொடக்கம் முதலே பலம் வாய்ந்த அணியான அமெரிக்காவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சுவீடன் வீராங்கனைகள் அற்புதமாக விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கென், லென்ஸி ஆகியோர் அடித்த கோல்களை சுவீடன் கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு ஆணிகளால் கோல் அடிக்க முடியவில்லை இதை அடுத்து கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்ட போதும் கோல் ஏதும் விழாததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி சூட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டதால் ஆட்டம் சடன் டிப் முறைக்கு மாறியது. சடன் டிப் முதல் வாய்ப்பை 2 அணிகளும் கோலாக மாற்றின. 2வது வாய்ப்பில் அமெரிக்க வீராங்கனை கிலி உதைத்த பந்து கம்பத்தில் பட்டு இலக்கினை தவறவிட்டது. அடுத்து ஸ்வீடனுக்கு கிடைத்த வாய்ப்பினை லினா கோலாக மாற்றினார். இதை அடுத்து 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவை ஸ்வீடன் வெளியேற்றி காலிறுதியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

The post உலக மகளிர் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி: நடப்பு சாம்பியன் அமெரிக்கா அதிர்ச்சித் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Women's World Cup International Soccer Tournament ,USA ,Australia ,Women's World Cup 9th Women's World Cup ,Women's World Cup International Football Tournament ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!