×

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

டெல்லி: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆடியோ மீது நடவடிக்கை எடுப்பதற்கான என்ன ஆதாரம் உள்ளது என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார். முற்றிலும் அபத்தமான, bogus மனு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார். யாரோ தெருவில் போவோர் பேசிய செய்தியை அடிப்படையாக கொண்டு மோசடியான மனு தாக்கல் செய்வதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உறுதி செய்யப்படாத ஒரு ஆடியோவை வைத்து உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவத என தலைமை நீதிபதி காட்டமாக விமர்சனம் தெரிவித்துள்ளர்.

The post அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Minister B. TD R.R. Pranivel Thyagarajan ,Delhi ,Minister B. TD R.R. ,Pranivel Thyagarajan ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...