×

டிவி விலை ஒரு கோடியா!: 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரமாண்ட மைக்ரோ எல்.இ.டி. டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்..

டெல்லி: சாம்சங் நிறுவனம் ரூ.1.15 கோடி விலையில் பிரமாண்ட மைக்ரோ எல்.இ.டி. டிவியை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் சாம்சங் பிராண்ட் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. ப்ரீமியம் தரத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் இதன் தரத்திற்காகவே வாடிக்கையாளர்கள் தேடி தேடி சாம்சங் நிறுவனத்தின் டிவைஸ்களை வாங்குகின்றனர். இந்நிலையில், பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய மைக்ரோ எல்இடி டிவி முற்றிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

இந்த சாம்சங் 110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவி 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் அளவிலான சிறிய LED-களைக் கொண்டுள்ளது. வழக்கமான ஒஎல்டி பிக்சல்களை விட பத்தில் ஒருமடங்கு வரை அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வீட்டிலிருந்தபடியே தியேட்டர் அனுபவத்தை பெறமுடியும். இதுதவிர, மைக்ரோ எல்இடி தொழில்நுட்பம் ஆனது பிரைட்நஸ் அளவை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், துல்லியமான வண்ணங்களை வழங்கும். அதேபோல், பெசல்- லெஸ் டிஸ்ப்ளேவுடன் கூடிய இதன் டிசைனும் பிரம்மிக்கவைக்கும் விதமாக உள்ளது.

ஆடியோ அம்சத்தை பொறுத்தவரை, டால்பி அட்மோஸ் (Dolby Atmos)ஆடியோ அம்சத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியின் டாப் சேனல் ஸ்பீக்கர்கள் வழியாக 3D சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு குட்டி தியேட்டர் போலவே அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் மைக்ரோ எல்இடி ஆர்ட் மோட் மற்றும் அம்பியன்ட் மோட்+ போன்ற மேம்படுத்தப்பட்ட பெர்சனலைஸ்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. புதிய சாம்சங் டிவியில் மைக்ரோ எல்இடி, மைக்ரோ கான்டிராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ எச்டிஆர் மற்றும் மைக்ரோ ஏஐ பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் OTS ப்ரோ, டால்பி அட்மோஸ் மற்றும் Q சிம்பனி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் அதிகபட்சம் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க வழி செய்கிறது. மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ரிமோட்-இல் பேட்டரி போட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவியின் விலை ரூ. 1 கோடியே 14 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

The post டிவி விலை ஒரு கோடியா!: 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரமாண்ட மைக்ரோ எல்.இ.டி. டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்.. appeared first on Dinakaran.

Tags : Samsung ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...