×

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

மும்பை : ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.மும்பையிலுள்ள ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘அடுத்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடவடிக்கை தொடங்கியது.அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும். குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹஜ் 2022 நடைபெறுகிறது, இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள் மற்றும் ஹஜ் 2022-ன் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்திய, சவுதி அரசுகளால் வகுக்கப்படும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஹஜ் பயணிகள் தேர்வு நடைபெறும்.உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஹஜ் பயணிகளுக்கு இந்தியாவில் இருந்து அவர்கள் கிளம்பும் இடங்களில் வழங்கப்படும். அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை மற்றும் இ-மசிஹா வழங்கப்படும்.அடுத்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடவடிக்கை தொடங்குப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும்,’ என்றார். …

The post ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mukhtar Abbas Naqui ,Mumbai ,Union Minority ,Welfare Minister ,Mukhtar Abbas ,Mukhtar Abbas Naqvi ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...