×

கன்னியாகுமரி கடற்கரையில் காற்றாடி திருவிழா கோலாகலம்: பிரமாண்டமான சாண்டா கிளாஸ் காற்றாடி பலரது கவனத்தை ஈர்த்தது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் 3 நாட்களாக நடைபெற்ற காற்றாடி திருவிழா பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுலா பயணிகளின் விருப்ப இடமான கன்னியாகுமரியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் அங்கு காற்றாடி திருவிழாவை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த வெள்ளி கிழமை தொடங்கி 3 நாட்களாக குமரியில் திருவிழா களைகட்டியது. நிறைவு நாளான நேற்று சங்குத்துறை கடற்கரையில் ஏராளமான காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன.

டிராகன், பாண்டா, யானை, குதிரை வடிவிலான காற்றாடிகள் பறந்து கண்களுக்கு விருந்தளிக்க அவற்றை சுற்றுலா பயணிகள் ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். குழந்தைகளை கவரும் வகையில் பிரமாண்டமான சாண்டா கிளாஸ் தாத்தா வடிவிலான காற்றாடியும் வானில் பறக்கவிடப்பட்டது. திருவிழாவுக்காக மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் வடமாநிலங்களில் இருந்தும் காற்றாடி இயக்குபவர்கள் வரவழைக்கப்பட்டனர். விண்ணை அலங்கரித்த வண்ண வண்ண காற்றாடிகளை கண்டு மனம் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் வரும் காலங்களிலும் இதுபோல் காற்றாடி திருவிழாவை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

The post கன்னியாகுமரி கடற்கரையில் காற்றாடி திருவிழா கோலாகலம்: பிரமாண்டமான சாண்டா கிளாஸ் காற்றாடி பலரது கவனத்தை ஈர்த்தது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Beach Kite Festival Ablaze ,Santa Claus ,Kanyakumari ,Kanyakumari beach ,Kanyakumari beach kite ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?