×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆக. 29ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!!

புதுக்கோட்டை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யாவும் ஆகஸ்ட் 29ல் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடியில் அசையும், அசையா சொத்துகள் குவித்ததாக சி.விஜயகுமார் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த மே 22ம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 126 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கடந்த 5ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர் ஆஜரானார். இந்நிலையில், வருகின்ற 29ம் தேதி விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆக. 29ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister of Extraordinary Maji ,vijayapascar ,Pudukkotta ,minister ,chief minister ,D.C. ,Vijayapaskar ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...