×

ஆஸ்கர் தம்பதியரை ஏமாற்றினாரா, பெண் ஆவணப்பட இயக்குநர்?…கார்,வீடு வங்கியில் ஒருதொகை செலுத்தியதாக கூறிய இயக்குநர் மீது பெள்ளி புகார்

நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்று ஆவண படத்தில் நடித்த முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் தங்களை அந்த படத்தின் இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தம்பதியினர் பொம்மன், பெள்ளி இந்த தம்பதியினருடன் இரு யானைகளை வைத்து கடந்த 2019ம் ஆண்டு யானைகள் பராமரிப்பு பற்றி அமெரிக்க தம்பதிக்கு ஊட்டியில் பிறந்து வளர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் என்ற பெண் இயக்குனர் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கபட்டது. இந்த வருடம் சிறந்த ஆவணப்படமாக ஆஸ்கர் விருது பெற்றது.

இந்நிலையில் ஆவண படத்தின் இயக்குனர் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இந்த தம்பதிக்கு கார் மற்றும் வீடு வழங்கியதாகவும் அவரது வங்கி கணக்கில் ஒரு தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறியதாகவும் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இதுவரை அந்த இயக்குநர் தங்களது அலைபேசி எண்ணை கூட எடுப்பதில்லை எனவும் வீடு, கார் மற்றும் தொகை செலுத்தியதாக கூறியது முற்றிலும் தவறான தகவல் எனவும் ஆஸ்கர் தம்பதியரான பொம்மன், பெள்ளி குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ள நிலையில் அப்பாவி பழங்குடியின தம்பதியரை ஏமாற்றி விட்டார்களா என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

The post ஆஸ்கர் தம்பதியரை ஏமாற்றினாரா, பெண் ஆவணப்பட இயக்குநர்?…கார்,வீடு வங்கியில் ஒருதொகை செலுத்தியதாக கூறிய இயக்குநர் மீது பெள்ளி புகார் appeared first on Dinakaran.

Tags : Oscar ,Nilgiris ,Pomman ,Mudumalai ,Belli ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...