×

டெல்லி நிர்வாக மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்… அவையில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் ஆம் ஆத்மி எம்பிகளுக்கு கொறடா உத்தரவு

டெல்லி : மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதா இன்று பெரும் பரபரப்புக்கு இடையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அவையில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் ஆம் ஆத்மி எம்பிகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்யும் அவசர சட்டம் கடந்த மே மாதம் இயற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்த மசோதா கடந்த 3ம் தேதி மக்களவையில் எளிதாக நிறைவேறிய நிலையில், அந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஆனால் மசோதாவை முறியடிப்பதற்கான சக்கர வியூகத்தை வகுக்க காங்கிரஸ் தலைவர் கார்கேவின் அலுவலக அறையில் இன்று காலை I.N.D.I.A கூட்டணி தலைவர்களின் ஆலோசனை நடைபெற உள்ளது.
மாநிலங்களவையில் நியமன எம்பிக்கள் உட்பட மொத்தம் உள்ள 245 எம்பிக்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மொத்த பலம் 111 ஆகும். மசோதாவை நிறைவேற்ற 123 எம்பிக்களின் ஆதரவு அவசியம். தற்போது, I.N.D.I.A கூட்டணியில்ல 99 எம்பிக்கள் உள்ளனர். எந்த பக்கமும் இணையாமல் உள்ள கட்சிகளைச் சேர்ந்த 28 எம்பிக்கள் இருக்கின்றன. இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்றாலும் கூட தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு எம்.பி., பிஜு ஜனதா தளம் கட்சியின் 9 எம்பிக்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 9 பேர் என மொத்தம் 19 எம்பிக்கள் டெல்லி மசோதாவை ஆதரிக்க உள்ளனர். இதனால் 130 பேரின் ஆதரவோடு டெல்லி மசோதாவை பாஜக நிறைவேற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post டெல்லி நிர்வாக மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்… அவையில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் ஆம் ஆத்மி எம்பிகளுக்கு கொறடா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Corada ,Congress ,Aadmi ,Delhi ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள்...