×

குண்டுமல்லி கிலோ ₹240ஆக சரிவு

சேலம், ஆக.7:சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லைபூ, ஜாதிமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், அரளி, சம்பங்கி, சாமந்தி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனை செல்கிறது. கடந்த மூன்று நாட்களாக விசேஷம் இல்லாததால் பூக்களின் விற்பனை குறைந்துள்ளது.

நேற்று சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. ஒரு கிலோ குண்டுமல்லி ₹240 என குறைந்தது. முல்லை ₹200, ஜாதிமல்லி ₹240, காக்கட்டான் ₹120, கலர் காக்கட்டான் ₹80, மலை காக்கட்டான் ₹120, சம்பங்கி ₹120, சாதாசம்பங்கி ₹120, அரளி ₹50, வெள்ளை அரளி ₹60, மஞ்சள் அரளி ₹60, செவ்வரளி ₹100, ஐ.செவ்வரளி ₹70, நந்தியாவட்டம் ₹25, சிவப்பு நந்தியாவட்டம் ₹50, சாமந்தி ₹100 என விற்பனை செய்யப்பட்டது

The post குண்டுமல்லி கிலோ ₹240ஆக சரிவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Gundamalli ,Mullaiboo ,Jathimalli ,Kanakambaram ,Kakattan ,Arali ,Sambangi ,Samanthi ,Salem district ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின