×

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி ஆக. 10ம் தேதி துவக்கம் நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அறிக்கை

திசையன்விளை,ஆக.7: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஆக. 10ம் தேதி துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளதாக நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவில் ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடிப் போட்டி திசையன்விளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் வரும் ஆக.10ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் தினமும் மாலை 5 மணி முதல் நடக்கிறது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் சுமார் 80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளோடு சுழற்கோப்பைகள் பரிசாக வழங்கப்படும். மொத்தம் சுமார் ₹15 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை முதல்நாளான வரும் 10ம் தேதி சபாநாயகர் அப்பாவு துவக்கிவைக்கிறார். மறுநாள் (11ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை திசையன்விளை காமராஜர் சிலை முதல் போட்டி மைதானம் வரை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அணிவரிசை நடைபெறும்.

இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். தொடர்ந்து 13ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் மேலும் பல்வேறு அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், யூனியன் சேர்மன்கள், துணை சேர்மன்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், நகராட்சி சேர்மன்கள், துணை சேர்மன்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ். தலைவர்கள், துணைத்தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர். இதனிடையே கபடிப் போட்டிகளுக்கு இடையே ரசிகர்கள் கண் கவரும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை காண அனுமதி இலவசம். எனவே, இதையே அனைவரும் அழைப்பாக ஏற்று தமிழரின் வீர விளையாட்டான கபடிப் போட்டியை கண்டு மகிழ வர வேண்டுகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை மாவட்ட பஞ்.தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

The post முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி ஆக. 10ம் தேதி துவக்கம் நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Punch ,Nelly District ,V.A. ,S.S. ,R.R. Jegadese ,CM artist ,Century Festival ,CM ,Vector Electronics Kabaddi Competition ,10th, Punch in ,V.A. S.S. R.R. ,Jegadese ,Dinakaran ,
× RELATED ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில்...