×

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹7 கோடியில் தென்காசி ரயில் நிலைய மேம்பாட்டு பணி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கிவைத்தார்

தென்காசி, ஆக. 7: ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹7 கோடி செலவில் தென்காசி ரயில் நிலைய மேம்பாட்டு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரயில்வே அமைச்சகம் ₹24,470 கோடி ஒதுக்கியது. தெற்கு ரயில்வே கட்டுபாட்டில் உள்ள தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள், கேரளாவில் 6 ரயில் நிலையங்கள், கர்நாடகாவில் ஒரு ரயில் நிலையம் என மொத்தம் 25 ரயில் நிலையங்களில் மேம்பாடு மற்றும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவற்றில் ₹7.08 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக ெதன்காசி ரயில் நிலையத்தின் 2வது நுழைவாயிலை மேம்படுத்துதல், மேலும் அங்கு புதிய நிலையக் கட்டிடத்தை நிர்மாணித்தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல், சுற்றோட்டப் பகுதியை மேம்படுத்துதல், காம்பவுண்ட் சுவர்களை புனரமைத்தல், நிலத்தோற்ற முகப்பு, பயணிகள் தொடர்பு பகுதியின் உட்புற புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவக்கிவைத்தார். இதையொட்டி தென்காசி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் தனுஷ்குமார் எம்பி , பழனி நாடார் எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் சாதிர், பத்ம விருது பெற்ற அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், மதுரை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் ரமேஷ் பாபு வாழ்த்திப் பேசினர்.

இதில் ஆர்டிஓ லாவண்யா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், பாஜ மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, பாஜ மாநில பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், ஒன்றிய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தொழில் பிரிவு மாநில செயலாளர்கள் சாரல் அருணாச்சலம், மகாதேவன், மாவட்டச் செயலாளர்கள் சுப்பிரமணியன், புலிக்குட்டி, ராஜலட்சுமி, ஜானகி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், அனிதா, சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரங்கராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி, ராஜ்குமார், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேந்தர், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூது, ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், ஒன்றியச் செயலாளர்கள் அழகுசுந்தரம், வல்லம் திவான் ஒலி, ரவிசங்கர், நகரச் செயலாளர்கள் வெங்கடேசன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி, முத்தையா, பண்டாரம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கேஎன்எல் சுப்பையா, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் நகரத்தலைவர் மாடசாமி ஜோதிடர், ஈஸ்வரன், தியாகராஜன், காஜா, கோவிந்தராஜ், தேவேந்திரன், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் வேலுச்சாமி, கிருஷ்ணராஜா, அண்ணாமலை, ரமேஷ், கோமதிநாயகம், நாகராஜ் சரவணார், இசக்கி பாண்டியன், ஜபருல்லாகான், வீராணம் சேக்முகமது, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், அணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், முகமது அப்துல்ரஹீம், சண்முகநாதன், ரகுமான்சாதத், தர், ஹக்கீம், முத்துவேல், தங்கபாண்டியன், கண்ணன், வக்கீல் செந்தூர்பாண்டியன், யூனியன் துணை தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், கரிசல் வேல்சாமி, கருப்பண்ணன், நகர நிர்வாகிகள் பால்ராஜ், ராம்துரை, ஷேக்பரீத், பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ், மைதீன், ராமராஜ், கஜேந்திரன், வேல்ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹7 கோடியில் தென்காசி ரயில் நிலைய மேம்பாட்டு பணி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tenkasi ,Railway Station ,Tenkasi railway station ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...