
தண்டராம்பட்டு, ஆக.7: விடுமுறை நாளான நேற்று தண்டராம்பட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலாப்பணிகள் திரண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். இந்த அணையின் நீர் மட்டம் மொத்தம் 119 அடி உயரம் கொண்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதேபோல், தற்போதும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 109.30 அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையில் உள்ள ஆதாம் ஏவான் பூங்கா, ராக்கெட் பார்க், காந்தி மண்டபம், படகு குளம், நீச்சல் குளம், கலர்மீன் கண்காட்சி, முதலை பண்ணை, தொங்கு பாலம், வீரமங்கை பார்க், தாஜ்மஹால் பார்க், புறா கூண்டு உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். அவர்கள் குடும்பத்துடன் அணையை சுற்றிப்பார்த்து அணையில் பிடிக்கப்படும் மீன்களை வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
The post விடுமுறை நாளான நேற்று சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலாப்பயணிகள் appeared first on Dinakaran.