×

குறைபாட்டுடன் வாகனத்தை இயக்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அரியலூர், ஆக.7: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக பணிமனை நிர்வாக போக்கை கண்டித்து வாயிற் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சிஐடியூ திருச்சி மண்டல துணைத் தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். சிஐடியூ நிர்வாகிகள் சுப்பிரமணியன், வீரப்பன், வீரமணி, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன், பொதுச் செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சிங்கராயர், சிஐடியூ மின்சார வாரிய மாவட்ட பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓவர் டைம் பார்ப்பதை கட்டாயமாக்க கூடாது. ஒப்பந்த படியான ஓவர் டைம் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த சரத்துகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பிரேக் வைப்பர், ஹெட்லைட் குறைபாட்டுடன் வாகனத்தை தடத்தில் இயக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது, சேதாரம் ஆன டயரை திரும்பத் திரும்ப பேருந்தில் பொருத்தி பயணிகளையும் ஓட்டுனர்களையும் பலியாக்க கூடாது. தேவைக்கேற்ப விடுப்பு வழங்காமல் விடுப்பை மறுத்து ஏ மார்க் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாயிற் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post குறைபாட்டுடன் வாகனத்தை இயக்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation Employees Association ,Ariyalur ,District Jayangondam Transport Corporation Workplace ,Tamil Nadu Government Transport Corporation Employees Association ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...