×

பெரம்பலூர் அருகே விதை திருவிழாவில் 50 ஆயிரம் எழுத்துகளுடன் கவனத்தை ஈர்த்த வாலிபர் வரைந்த நம்மாழ்வார் ஓவியம்

குன்னம், ஆக. 7: பெரம்பலூர் அருகே விதை திருவிழாவில் வாலிபர் வரைந்த 50 ஆயிரம் எழுத்துகள் கொண்ட நம்மாழ்வார் ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் சேர்ந்த ஜெயச்சந்திரன், கலைச்செல்வி தம்பதியினரின் மகன் மதியழகன் (27). இவர் பெரம்பலூர் தனலட்சுமி னிவாசன் கல்லூரில் 2022 ம் ஆண்டு பி,இ. முடித்தார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், ஓவியத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்த இவர் 7.1.2023 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவாக அவர் எழுதிய ”பூமித்தாயே” எனும் நூலில் இருந்து சுமார் 50,000 எழுத்துக்களை எடுத்து நம்மாழ்வரின் படத்தை நிழல் ஓவியமாக வரைந்துள்ளார்.

இந்த ஓவியத்தில் வரிக்கு 195 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 260 வரிகளுடன் ஏறத்தாழ 50,700 எழுத்துக்களால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்தஓவியம் கலாம் வேர்டு ரெக்கார்டு ( \\”Kalams world record\\”) புத்தகத்தில் உலக சாதனையாக பதிவு செய்து சான்றளிக்கப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒதியம் – அசூர் குறுக்கு சாலையில் உள்ள வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த \\”மரபு விதைத் திருவிழா 2023 \\” நிகழ்ச்சியில் இந்த ஓவியம் இடம் பெற்றிருந்தது. விழாவிற்கு வந்த அனைவரையும் இந்த புகைப்படம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் அருகே விதை திருவிழாவில் 50 ஆயிரம் எழுத்துகளுடன் கவனத்தை ஈர்த்த வாலிபர் வரைந்த நம்மாழ்வார் ஓவியம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Valibur ,Seed Festival ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...