×

இளம்பெண் மாயம்

 

ஈரோடு, ஆக. 7: ஈரோடு மாவட்டம், அந்தியூர் மாத்தூர் கிழக்கு வீதியை சேர்ந்த சண்முகம் புவனேஸ்வரி (19). இவருக்கு இவரது தாய்மாமன் மகனுடன் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். ஆனால், புவனேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லையென கூறி வந்தார். இருப்பினும், சண்முகம் திருமணத்திற்காக பத்திரிக்கை அச்சடித்து வழங்க துவங்கினர்.

பெருந்துறை ராஜ வீதியில் உள்ள சண்முகம் அவரது மூத்த மகள் நதியா வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க புவனேஸ்வரியுடன் கடந்த 27ம் தேதி சென்றார். அங்கே இரவு தங்கி விட்டனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது புவனேஸ்வரி வீட்டில் இல்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் புவனேஸ்வரி கிடைக்கவில்லை. இதுகுறித்து புவனேஸ்வரியின் தாய் பாப்பாத்தி பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Shanmugam Bhuvaneshwari ,Andhiur Mathur East Road, Erode District ,अभुभबेन मायम ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...