×

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து எஸ்விஜிவி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

காரமடை,ஆக.7: காரமடை எஸ்விஜிவி பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள் காரமடை தினசரி மற்றும் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியும்,பதாகைகளை காய்கறி கடைகளில் கட்டியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.பதாகையில் புதைத்தால் மண்ணுக்கு கேடு.எரித்தாலோ சுற்றுச்சூழலுக்கு கேடு. பிளாஸ்டிக்கை தவிர்ப்போம். கடைகளுக்கு வரும்பொழுது பாத்திரம் அல்லது துணிப்பை எடுத்து வருவோம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.நிகழ்ச்சியில் இன்ட்ராக்ட் கிளப் தலைவர் விதுர்கிருஷ்ணா,செயலாளர்அஸ்வத்,பொருளாளர் ஜெயசூர்யா,எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,முதல்வர் சசிகலா,ரோட்டரி கிளப்பின் முன்னாள் ஆளுநரும்,பள்ளியின் நிர்வாக அலுவலருமான சிவசதீஷ்குமார்,காரமடை ரோட்டரி சங்க தலைவர் விஜயபிரபு, செயலாளர் சோமசுந்தரம்,பொருளாளர் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து எஸ்விஜிவி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : SVGV school ,Karamadai ,Karamadai SVGV School ,SVGV ,Dinakaran ,
× RELATED நீண்ட நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்