×

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஆக. 7: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கற்காத்தகுடி ஊராட்சி மேல கற்காத்தக்குடி கிராமத்திற்கு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இந்த சாலை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலையில் டூவீலர் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

சேதமடைந்த சாலையால் இரவு நேரங்களில் கிராம மக்கள் யாருக்கேனும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு வர ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களின் டிரைவர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பலத்த சேதமடைந்துள்ள இச்சாலையை விரைந்து சீரமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,RS Mangalam Panchayat Union ,Karkathakudi ,Panchayat ,Trichy ,Rameswaram ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா