×

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

 

காளையார்கோவில், ஆக. 7: காளையார்கோவில் ஒன்றியம் கீழக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம், உலக புலிகள் தினம், வானவில் மன்ற அறிவியல் ஆய்வுகள் என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்து, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்தார். ஆசிரியை மீனாட்சி வரவேற்றார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்து, இந்தியாவின் தேசிய விலங்கான புலி குறித்த பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.

அறிவியல் செயல்பாடுகள் மற்றும் கணித செயல்பாடுகளை வானவில் மன்ற கருத்தாளர் ஜெயபிரியா செய்து காண்பித்தார். இதய துடிப்பு கருவி, சவ்வூடு பரவல், மலர்களின் பாகங்களை பிரித்தல், கொள்ளளவை கண்டறிதல், கண்ணாடியின் பல்வேறு பிரதிபலிப்பு, வடிவியலில் இயற்கணிதம் போன்ற செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். முடிவில், ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார். ஆசிரியைகள் அமல தீபா, கமலாபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Government School ,Kallyargo ,Abdul Kallam Memorial Day ,Padrakashi ,Union ,Middle School ,Kallayargo ,Thirty Festival ,Dinakaran ,
× RELATED பாக்கமுடையான்பட்டு அரசு பள்ளியில் மூலிகை செடிகளை வளர்க்கும் மாணவர்கள்