×

இரும்பு கூண்டில் பூட்டிக் கொண்டு மஸ்க் – ஜூக்கர்பெர்க் நேருக்கு நேர் நிஜ சண்டை: டிவிட்டரில் நேரலை செய்ய திட்டம்

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களான எலான் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெர்க்கும் நேருக்கு நேராக நிஜமாகவே சண்டை போடப் போகிறார்கள். இது டிவிட்டரில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், சரியான எடக்குமடக்கான பேர்வழி. சமீபத்தில் டிவிட்டரின் பெயரையும், லோகோவையும் எக்ஸ் என மாற்றினார்.

டிவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் த்ரெட்ஸ் எனும் சமூக ஊடகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். அப்போது டிவிட்டரை காப்பி அடித்து த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக மஸ்க் கிண்டல் செய்ய இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை தீவிரமடைந்து தற்போது இருவரும் நேருக்கு நேராக நிஜமாக மோதிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலையான ஜியு ஜிட்சூ பயிற்சி எடுத்து வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்த மஸ்க், இரும்பு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டு நிஜ சண்டைக்கு தயாரா என சவால் விடுத்தார். அதை ஜூக்கர்பெர்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மஸ்க்கும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றவர். எனவே இவரும் சண்டைக்காக தயாராகி வரும் புகைப்படங்களை, பயிற்சி செய்யும் புகைப்படங்களை டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஜூக்கர்பெர்க் உடனான சண்டை டிவிட்டரில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த சண்டை நடக்குமா நடக்காதா என்பது உறுதி இல்லை என்றாலும் மஸ்க், ஜூக்கர்பெர்க்கின் அதிரடியான பயிற்சி புகைப்படங்கள் வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இரும்பு கூண்டில் பூட்டிக் கொண்டு மஸ்க் – ஜூக்கர்பெர்க் நேருக்கு நேர் நிஜ சண்டை: டிவிட்டரில் நேரலை செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Musk ,Zuckerberg ,New York ,Elon Musk ,Mark Zuckerberg ,Twitter ,
× RELATED காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு...