×

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள்

 

காஞ்சிபுரம், ஆக. 7: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 7) முதல் வரும் 10ம் தேதி வரை கீழ்கண்ட மார்க்கங்களிலிருந்து திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் – திருத்தணிக்கு 100, அரக்கோணம் – திருத்தணிக்கு 25, சென்னை – திருத்தணிக்கு 100, திருப்பதி – திருத்தணிக்கு 75 பேருந்துகள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்படும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

The post ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் appeared first on Dinakaran.

Tags : Tiruthani Murugan Temple ,Aadi Krittikai ,Kanchipuram ,Adikritika ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி