×

மணிப்பூரில் தொடரும் வன்முறை வீடுகள், கடைகள் தீக்கிரை துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயம்

இம்பால்: மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 15 வீடுகள், ஒரு வணிக கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டன.மணிப்பூரில் மெய்டீஸ்,குக்கி இன மக்களுக்கு இடையேயான மோதல் பெரும் கலவரமாக உருவெடுத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை ஓயாமல் உள்ளது. இதில் 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்துள்ளனர். மணிப்பூரில் சட்டமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி 27 சட்டமன்ற தொகுதிகளின் ஒருங்கிணைப்பு கமிட்டி 24 மணிநேர பொது முழு அடைப்புக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது.

இதனால் இம்பாலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. லாங்கால் விளையாட்டு நகரில் ஒரு கும்பல் 15 வீடுகளுக்கு தீ வைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஒரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள செக்கான் பகுதியில் ஒரு வணிக கட்டிடம், 3 வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். காங்க்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசண்டை நடந்தது. இதில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாஜ கூட்டணியிலிருந்து குக்கி மக்கள் கட்சி விலகல்
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள குக்கி மக்கள் கூட்டணி (கேபிஏ) கட்சி, மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தோங்மாங்க் ஆளுநர் அனுசுயாவ உய்கேயிடம் கடிதம் அளித்தார். கேபிஏ கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். 60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜவுக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்பிஎப் கட்சியின் 5 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சைகளும் ஆதரவு அளிக்கின்றனர். இதனால் பாஜ ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இதற்கிடையே வரும் 21ம் தேதி மணிப்பூர் சட்டமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அச்சத்தால் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க குக்கி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். பேரவையில் குக்கி இனத்தை சேர்ந்த 10 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

5 போலீசார் சஸ்பெண்ட்
கடந்த மே 4ம் தேதி தவுபால் மாவட்டம்,நோங்க்போக் செக்மாய் பகுதியில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலைய அதிகாரி உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

The post மணிப்பூரில் தொடரும் வன்முறை வீடுகள், கடைகள் தீக்கிரை துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Meites ,Kuki ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...