×

தக்காளி கிலோ ₹40 பழநியில் அலைமோதல்

பழநி: தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம், பழநி தக்காளி மார்க்கெட்டில் 30 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வந்து கொண்டிருந்தது. இதனால் 14 கிலோ பெட்டி ரூ.1400 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பழநி தக்காளி மார்க்கெட்டில் சுமார் 50 டன் அளவிற்கு தக்காளியின் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக விலை பாதியாக குறைந்து, 14 கிலோ பெட்டி நேற்று ரூ.500ல் இருந்து ரூ.600 வரை விற்பனையானது. இதனால் பழநி பகுதியில் சில்லரை விற்பனையிலும் தக்காளி விலை ரூ.50 முதல் ரூ.40 என குறைந்துள்ளது. இதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தக்காளி கிலோ ₹40 பழநியில் அலைமோதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pani Alimothal ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...