×

நடப்பு சாம்பியன் அமெரிக்கா அதிர்ச்சி: ஸ்வீடன் முன்னேற்றம்

மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரில், மெல்போர்னில் நேற்று நடந்த ‘ரவுண்ட் ஆப் 16’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா – சுவீடன் அணிகள் மோதின. அமெரிக்க வீராங்கனைகள் ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் ஆட்டத்தில் அமர்க்களப்படுத்தினாலும், தற்காப்பு ஆட்டத்தில் உறுதியாக இருந்த சுவீடன் அணி கோல் விழாமல் பார்த்துக்கொண்டது. அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளையும் சுவீடன் முறியடிக்க, ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. இதனால், கூடுதலாக அரை மணி நேர ஆட்டம் நடந்தது.

அதிலும், சுவீடன் அணியின் தற்காப்பு அரணை அமெரிக்காவால் தகர்க்க முடியாததால் இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் அமெரிக்கா தரப்பில் 21 ஷாட்களும், சுவீடன் தரப்பில் 7 ஷாட்களும் அடிக்கப்பட்ட நிலையிலும் ஒரு கோல் கூட விழாததால், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.

அதில் சுவீடன் கோல் கீப்பர் ஜெசிரா முசோவிச் அபாரமாக செயல்பட, அந்த அணி 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்கிய அமெரிக்கா, இம்முறை ‘ரவுண்ட் ஆப் 16’ உடன் மூட்டை கட்டி பரிதாபமாக வெளியேறியது.

The post நடப்பு சாம்பியன் அமெரிக்கா அதிர்ச்சி: ஸ்வீடன் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : USA ,Sweden ,Women's World Cup football ,Round of 16 ,Melbourne ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள...