×

கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை: கை அகற்றப்பட்ட குழந்தை மரணத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜிஷா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் உள்ள நீரை அகற்றுவதற்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கைமுட்டி வரையுள்ள பகுதி கருப்பாக மாறி குழந்தையின் கை அழுகிவிட்டது தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது. இந்நிலையில் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அந்த குழந்தை, கடந்த சில நாட்களாக சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில் மரணமடைந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கின்றது.

உயிர்களை அலட்சியமாக கருத கூடிய மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சிய மரணங்கள் நிகழாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தையை இழந்த பெற்றோருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,STPI ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்