×

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன?: வைகோ கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பதில்

டெல்லி: மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன? என்று வைகோ கேள்வி எழுப்பியதற்கு, இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் 02.08.2023 அன்று அளித்த பதில் வருமாறு:-

* மத்திய பல்கலைக்கழகங்களில் 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பணி முறை காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சில ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டார்களா?

* இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐகூ) ஒரு சில பேராசிரியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளதா? 4000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளதா?

* அப்படியானால், பொது, பட்டியல் இன மற்றும் பழங்குடி இன பணியிடங்கள் நிரப்பப்படாத காரணங்கள் என்ன?

* இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டியல் இன, பழங்குடி இன பிரிவுகள் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப அரசாங்கம் உத்தேசித்துள்ளதா? அப்படியானால், ஆட்சேர்ப்புக்கான காலக்கெடு மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?

கல்வி அமைச்சர் டாக்டர். சுபா° சர்க்கார் பதில்:

(அ) முதல் (ஈ) கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகளாகும், அவை நாடாளுமன்றச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டு, அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயலாகும். பணி மூப்பு, ராஜினாமா மற்றும் அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக காலியிடங்கள் எழுகின்றன.

இடஒதுக்கீடு பிரிவு பதவிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு உட்பட, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கும், கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31, 2023 நிலவரப்படி, ஆட்சேர்ப்பு இயக்கத்தின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில், மொத்தம் 13,313 காலியிடங்கள் பத்து மாதங்களில் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

 

The post மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன?: வைகோ கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister of Education of the ,Union ,Vigo ,Delhi ,VICO ,Indian Union Education ,Union Education ,Minister ,Dinakaran ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்