×

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த உமா, டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜியாகவும், பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த அங்கித் ஜெயின், சென்னை தியாகராயர் நகர் துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சிவக்குமார், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சக்தி கணேசன், சென்னை ஐகோர்ட் கண்காணிப்பு பிரிவு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த மகேஷ்குமார், தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த சக்திவேல், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த அல்லாட்டி பள்ளி பவன்குமார் ரெட்டி, தாம்பரம் துணை கமிஷனராகவும், சென்னை அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன், சென்னை சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், தென் மண்டல மதுவிலக்குப் பிரிவு எஸ்பி வருண்குமார், திருச்சி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சுஜித்குமார், தென் மண்டல மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாகவும், சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு பிரிவு எஸ்பி ராஜராஜன், சேலம் நகர துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த லாவண்யா, சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராகவும், அந்தப் பதவியில் இருந்த சந்திரமவுலி, சேலம் நகர தலைமையிட துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி தலைமையிட துணை கமிஷனராக இருந்த உமையாள், சென்னை கோயம்பேடு துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த குமார், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும்,

அந்தப் பதவியில் இருந்த சரவணன், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமேஷ்பாபு, சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த விஜய் கார்த்திக் ராஜ், மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சினேகா பிரியா, மதுரை நகர வடக்கு துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த அரவிந்த், சிவகங்கை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த செல்வராஜ், வண்டலூர் ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமி துணை இயக்குநராகவும், அந்தப் பதவியில் இருந்த தீபா சத்யன், பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த ஜோஸ் தங்கையா, பொருளாதாரக் குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த பொன் கார்த்திக் குமார், அடையாறு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும்,

தாம்பரம் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த குமார், ஆவடி பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், புகழூர் காகித தொழிற்சாலை விஜிலன்ஸ் எஸ்பியாக இருந்த பண்டி கங்காதர் தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் விஜிலன்ஸ் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ஜெயலட்சுமி, மெட்ரோ ரயில் பாதுகாப்பு பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த குமார், மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா, மயிலாடுதுறை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த நிஷா, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Amudha ,Chennai ,Interior Secretary ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...