×

ஆஸ்திரேலியாவில் சீக்கிய பள்ளி மாணவர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பள்ளிகளில் படிக்கும் சீக்கிய மாணவர்கள் கிர்பான் வைத்துக்கொள்வதற்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்து குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், சீக்கியர்கள் எப்போதும் தங்களுடன் வைத்துகொள்ள வேண்டிய ஐந்து மத அடையாளங்களில் ஒன்றான கிர்பான் எனப்படும் குறுவாள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்டை சேர்ந்த கமல்ஜித் கவுர் அத்வான் என்பவர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குயின்ஸ்லேண்ட் உச்சநீதிமன்றம், சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் கிர்பான் வைத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று குயின்ஸ்லேண்ட் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் சீக்கிய பள்ளி மாணவர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி appeared first on Dinakaran.

Tags : Australia ,Melbourne ,Queensland court ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது