×

யூடியூபரின் வீடு புகுந்து மிரட்டியதாக புகார் நடிகர் பாலா மீது வழக்கு

திருவனந்தபுரம்: தமிழில் வீரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் பாலா. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் இவர் 2 ரவுடிகள் உள்பட 3 பேருடன் கொச்சியிலுள்ள அஜு அலெக்ஸ் என்ற யூடியூபரின் வீட்டுக்கு சென்று அவரது நண்பரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கொச்சி திருக்காக்கரை போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அஜு அலெக்சின் நண்பரான முகம்மது அப்துல் காதர் என்பவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.

அஜு அலெக்சின் வீட்டில் தான் மட்டும் இருந்தபோது, நடிகர் பாலா 2 ரவுடிகள் உள்பட 3 பேருடன் வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்ததாக தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நடிகர் பாலா உள்பட 4 பேர் மீது திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post யூடியூபரின் வீடு புகுந்து மிரட்டியதாக புகார் நடிகர் பாலா மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bala ,YouTuber ,Thiruvananthapuram ,Siruthai Siva ,
× RELATED பதவி தந்தருளும் பால விநாயகர்