×

கிராமப்புறங்களில் மக்கள்தொகை அடிப்படையில் புற்றுநோய் பதிவேடு தயாரிப்பு: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 147வது அறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிராமப்புறம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களும், மக்கள்ததொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் கீழ் வரும் வகையில் புற்றுநோய் வரைபடம் தயாரிக்க மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் சம்மதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தரவு மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் கொள்கைகள் வகுக்க உதவும். புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைக்கும் முக்கியத்துவம் தற வேண்டும். இதற்காக மாதத்தில் ஒருநாள் புற்றுநோய் பரிசோதனைக்கு நிர்ணயிக்கலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

The post கிராமப்புறங்களில் மக்கள்தொகை அடிப்படையில் புற்றுநோய் பதிவேடு தயாரிப்பு: நாடாளுமன்ற குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Parliamentary Committee ,New Delhi ,Parliamentary Standing Committee ,Union Ministry of Health and Family Welfare ,Rajya Sabha… ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை...