×

பிஎப்ஐக்கு சொந்தமான வில்லாக்கள், நிலங்கள் பறிமுதல்

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமாக மூணாறில் உள்ள வில்லாக்கள், நிலங்களை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2022 செப்டம்பர் 22ம் தேதி 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு செயல்பட ஒன்றிய அரசு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் வௌிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய பிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் கேரள மாநிலம் மூணாறில் தங்கி உள்ளனர். அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேர்க்க மூணாறு வில்லா விஸ்டா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்தை உருவாக்கி செயல்படுவதாகவும் தகவல் வௌியானது.

இதையடுத்து பணமோசடி தடுப்பு விசாரணையின் ஒருபகுதியாக மூணாறில் உள்ள 4 வில்லாக்கள், 6.75 ஏக்கர் நிலங்களை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக பறிமுதல் செய்தது. கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2.53 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post பிஎப்ஐக்கு சொந்தமான வில்லாக்கள், நிலங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : BFI ,New Delhi ,Popular Brand ,India ,Munnar ,Popular… ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...