×

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்ட அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

சென்னை: அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்பு கூட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நகருக்கு அருகில் உள்ள அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காட்டுப்பள்ளி லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங்களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை 10 மடங்கு விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அதானி குழுமம். இந்த திட்டத்திற்காக கடலினுள் 796.15 ஹெக்டேர் (2000 ஏக்கர் அளவு) அளவு ஆக்கிரமிப்பு செய்வதால் அருகில் உள்ள கிராமங்களில்கடல் நீர் புகுந்துவிடும். . சென்னைக்கான குடிநீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். ஆகவே இதை கருத்தில் கொண்டு, உடனடியாக அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு துணைபோகும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசையும், முதல்வரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

The post காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்ட அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Kattupally ,STPI Party ,CHENNAI ,STBI ,Tamil Nadu Government ,Adani ,Kattupalli ,Government ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...