×

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 7-10வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 7-10வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது.

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். மக்கள் பலரும் கிருத்திகை நாட்களில் தமிழ் முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவர். ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசமான நாளாகும். அப்போது முருகன் கோயிலில் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து வள்ளி, தெய்வானை சமேத முருகனை தரிசனம் செய்வர். இதன் காரணமாக ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 7-10வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது.

அரக்கோணத்திலிருந்து 25, திருப்பதியில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 7-10வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiritani Murugan Temple ,Audi ,Thiruvallur ,Kanchipuram, Chennai ,Buses ,Tiritati Murugan Temple ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்