×

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய கோரி மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: 150 பேர் கைது

கடலூர்: 20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய கோரி மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்யக்கோரி, மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கடலூர் ஜவான் பவான் சாலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் நாசர், பொது செயலாளர் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமார்பன், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், கவிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய கோரி மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: 150 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mazaka ,Cuddalore ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்