×

ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக் கிடந்த நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகம் திறப்பு

நெல்லை: ஆர்டிஓ உத்தரவையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக் கிடந்த நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பேராயராக பர்னபாஸ் பதவியேற்றதும் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல், தாளாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் ஒரு சில மாற்றங்கள் செய்தார். இதற்கு லே செயலாளர் ஜெயசிங் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக இரு தரப்பினர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்டிஓ விசாரணை நடந்தது. இதற்கிடையே டயோசீசன் அலுவலகம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஆர்டிஓ அளித்த தீர்ப்பில், மூலச் சட்டத்தின்படி பிஷப்புக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேராயரின் ஆலோசனையின் பேரில் டயோசீசன் அலுவலகத்தை திறந்து நிர்வாகத்தை நடத்தலாம். அதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆர்டிஓ தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று டயோசீசன் அலுவலகம் திறக்கப்பட்டது. திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், ஜெபம் செய்து அலுவலகத்தை திறந்தார். திருமண்டல அலுவலர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர். நிகழ்ச்சியில் திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், தொடக்கப்பள்ளிகளின் மேலாளர் அருள்ராஜ் பிச்சமுத்து, குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், தாளாளர்கள் சாலமோன் டேவிட் கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, நல்லூர் கல்லூரி ஜெகன், ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி கேபிகே செல்வராஜ், ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வக்கீல் அருள்மாணிக்கம், பார்வையற்றோர் பள்ளி பாஸ்கர் சாமுவேல், இடையன்குடி ஜெயகர், செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி, வக்கீல் ஜெனி, பெருமன்ற உறுப்பினர் ஏமன்குளம் அசோக், குருமார்கள் கியூபர்ட், ஆமோஸ், மற்றும் எபநேசர், டியூக் துரைராஜ், தனசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக் கிடந்த நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie CSI Matrimonial Office ,Nellai ,Nellai CSI Matrimonial Office ,RTO ,
× RELATED போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற...