×

ஆடி கிருத்திகையன்று பழனியில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என்ற தகவலை நம்ப வேண்டாம்: கோயில் நிர்வாகம்

திண்டுக்கல்: ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; ” 0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார், அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள்/ பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்” என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆடி கிருத்திகையன்று பழனியில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என்ற தகவலை நம்ப வேண்டாம்: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Audi Krishtika ,Palani: Temple Administration ,Dindigul ,Adi Kriti ,WhatsApp ,Palani Murugan Temple ,Audi ,Kriti ,Palani ,The Temple Administration ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...