×

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் துப்பாக்கியுடன் திடீர் கைது: பெங்களூரில் இருந்து திரும்பிய போது போலீசார் மடக்கினர்

சென்னை: பெங்களூரில் இருந்து திரும்பிய போது, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீசார் திடீரென மடக்கி கைது செய்து அழைத்து சென்றது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் அஸ்வத்தாமன்.

இவர் இன்று காலை பெங்களூரில் இருந்து தனது காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஆவடி காவல் நிலைய எல்கைக்குள் சென்ற போது, போலீசார் அவர் சென்ற காரை மடக்கினர். அப்போது காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த 3 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறிய போலீசார் அவரை கைது செய்தது தெரியவந்துள்ளது. அவரிடம் ஆவடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கக்கூடிய அஸ்வத்தாமன் திடீரென உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமன், இதற்கு முன்பு மாணவர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இளைஞர் காங்கிரசில் முக்கிய பதவியில் இருப்பதால், அவரது கைது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் உள்ள நிர்வாகி ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் துப்பாக்கியுடன் திடீர் கைது: பெங்களூரில் இருந்து திரும்பிய போது போலீசார் மடக்கினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Youth Congress ,General Secretary ,Ashwathaman ,Bangalore ,Chennai ,Aswathaman ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...