×

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொலை!!

இம்பால் : மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவாக்டா நகருக்குள் புகுந்து வன்முறையாளர்கள் தாக்கினர். இதையடுத்து வன்முறையாளர்கள் மீது மெய்தி சமூகத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் மெய்தி சமூகத்தினர் மூவர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையக்கப்பட்டன.

கடந்த வியாழன் அன்று பிஷ்ணுபூரில் ஆயுதப்படைகளுக்கும் மெய்தி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர். கங்வாய், போக்சாவ் நகரங்களில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மெய்தி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டி நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனிடையே பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள இந்திய ரிசர்வ் பெட்டாலியன் தலைமையகத்திற்கு 40 வாகனங்களில் வந்த சுமார் 500 பேர் 298 ரைபிள் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 327 சிறிய பீரங்கி குண்டுகள், 20 கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்.

The post மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Bishnupur, Manipur ,Imphal ,Manipur ,Bishnupur ,Fishnupur ,
× RELATED கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை...