- பஜாஜா
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- முதல்வர்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- தின மலர்
கொல்கத்தா: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் பாஜக முயற்சிக்கும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். வகுப்பு வாத பிரச்சனைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து இந்தியா கூட்டணி நாட்டை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வார்கள் என்றும் அது பற்றிய தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் மம்தா குற்றச்சாட்டினார். அதே சமயம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மேற்குவங்க மாநில பாஜக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது இந்த சந்தேகத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஏன் எழுப்பவில்லை என்று வினவி உள்ளது.
The post 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு இயந்திரங்களை தவறாக பயன்படுத்த பாஜக முயற்சி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
