×

மகனுக்கு விரைவில் திருமணம் அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் சாலை விபத்தில் பலி

சாயல்குடி. ஆக. 5: முதுகுளத்தூர் அருகே மகன் திருமண பத்திரிகையை சகோதரனுக்கு வழங்கச் சென்ற பெண் விபத்தில் பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஆரணவள்ளி(58). இவர் ஆவணி மாதம் நடக்கவிருக்கின்ற தனது மகன் திருமணத்திற்காக, தனது சகோதரனும், மணமகனின் தாய்மாமனுமான அழகர்சாமி என்பவருக்கு பத்திரிகை வழங்குவதற்காக அருகே உள்ள சூரன்குளம் கிராமத்திற்கு கணவருடன் டூவீலரில் சென்றுள்ளார். பின்னர் பத்திரிகை கொடுத்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது கருங்காலக்குறிச்சி காளிகோயில் அருகே எதிரே வந்த மினி வேன் அவர்களின் டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில் தம்பதியர் இருவரும் காயமடைந்தவர். இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் தலையில் பலத்த காயமடைந்த ஆரணவள்ளி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கீழத்தூவல் போலீசார் சூரன்குளத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் அழகர்சாமி மகன் அஜித்குமார்(24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்த ஆரணவள்ளி உடல் பரிசோத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகன் திருமணத்திற்கு பத்திரிகை வழங்கச்சென்ற தாய் இறந்த சம்பவம், புளியங்குடி கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மகனுக்கு விரைவில் திருமணம் அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் சாலை விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Mudukulathur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி