×

காட்டேரி பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகள்

 

ஊட்டி,ஆக.5:நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவை உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வாடிக்கை. நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில், அனைத்து பூங்காக்களும் செப்டம்பர்,அக்டோபரில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்காக தயராகி வருகிறது.குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா போன்றவற்றில் இரண்டாவது சீசனுக்காக மலர் நடவு பணிகள் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வந்தன.

குன்னூர் – மேட்டுபாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த வனங்களை ஒட்டி அமைந்துள்ள இப்பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இப்பூங்காவிலும் மலர் நாற்று நடவு பணிகள் துவங்கியுள்ளன. டேலியா, சால்வியா,பெகோனியா,பேன்சி, மேரிகோல்டு உட்பட 15 ரகங்களில் சுமார் 1.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இவை இரண்டாவது சீசன் துவக்கத்தின் போது பூத்து குலுங்கி, இரண்டாம் சீசனில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காட்டேரி பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Horticulture Department ,Nilgiri District ,Ooty Government Botanical Garden ,Rose Garden ,Tea Garden ,Arboretum ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...