×

மணல் கடத்திய லாரி, 2 டிராக்டர், 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் 6 பேர் கைது: 2 பேருக்கு வலை பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், குடியாத்தத்தில்

பேரணாம்பட்டு, ஆக.5: பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதிகளில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார் மற்றும் காமராஜ் நேற்று நகர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்காலபல்லியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 5 மாட்டு வண்டிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சீனிவான் (50), சப்ஸ்டேஷனை சேர்ந்த தனஞ்செழியன்(26), காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த குணன்(51), பாரதியார் நகரை சேர்ந்த நேதாஜி(23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய கணேசனை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் புத்து கோவில் பேருந்து நிலையம் அருகே பாண்டியன் என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அதற்குள் தப்பி ஓடினார். பின்னர், போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து பாண்டியனை தேடி வருகின்றனர்.

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் நேற்று வாகன தனிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அனுமதி இல்லாமல் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் லாரியை ஓட்டி வந்த குடியாத்தம் அடுத்த கல்மடகு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பார்த்திபன்(23) மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பீதாம்பரம் என்பவரின் மகன் சோனு(32) டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சோனுவை கைது செய்து, மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணல் கடத்திய லாரி, 2 டிராக்டர், 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் 6 பேர் கைது: 2 பேருக்கு வலை பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், குடியாத்தத்தில் appeared first on Dinakaran.

Tags : Vaba Peranamptu, KV Kuppam ,Gudiyattam ,Peranampatu ,Kudiattam ,Peranampatu, KV Kuppam ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...