
- ஜம்புவானோடை சவுத்வுட் தர்ம கோயில் திருப்பாதியம்மன் கோயல் தீய மித்தி விழா
- முத்துப்பேட்டை
- புகழ் பெற்ற தர்மராஜா கோயில் திருப்பாதியம்மன் கோயல் முப்பிடாதியம்மன் கோயில்
- ஜம்புவானோடை தென்வனக்காடு
- ஜம்புவானோடை தென்திரு தர்மராஜா கோயில் திருப்பாதியம்மன் கோயில் தீ விழா
முத்துப்பேட்டை, ஆக. 5: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற தர்மகோயில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நாளன அடுத்த மாதம் 7ம் தேதி தீ மிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று பெருமாள் ஆதினத்தார் வகையறா மண்டகப்படி சார்பில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post ஜாம்புவானோடை தெற்குகாடு தர்மகோயில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.