×

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம், ஆக. 5: நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு திருநாவுக்கரசரால் தேவாரம் பாடப்பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கற்பகவல்லி,ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் துர்க்கையம்மன், சந்தானராமர் கோயிலில் விஷ்ணு துர்க்கையம்மன்,நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் மகாமாரியம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

The post நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Adivelli ,Needamangalam ,Thirunavukkarasar ,Adi Velli ,
× RELATED தஞ்சாவூர் அருகே பயங்கரம்: பழ வியாபாரி வெட்டி படுகொலை: 5 பேரிடம் விசாரணை