×

பத்திரப் பதிவுத்துறையில் 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டில் 44 புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி ஏறக்குறைய நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்களில் புராதான கட்டிடங்கள் தவிர்த்து பிற கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான ராஜபாளையம், எட்டையபுரம், வைகுண்டம், முறப்பநாடு, திருவண்ணாமலை, காட்பாடி, புதுப்பேட்டை, பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, ஆழ்வார்திருநகரி, குடவாசல், கழுகுமலை, சாத்தான்குளம், திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுகுன்றம், ஆரணி, குளித்தலை, கமுதி, அருப்புக்கோட்டை, செம்பனார்கோவில், ஜி.பழூர், அரகண்டநல்லூர், சத்திரப்பட்டி, சூலூர், கிணத்துக்கடவு, பூதலூர், ஒரத்தநாடு, லால்குடி, மயிலம், சுவாமிமலை, வேதாரண்யம், நீடாமங்கலம், நாகூர், சீர்காழி, புள்ளம்பாடி, உத்திரமேரூர், மல்லசமுத்திரம், சங்கராபுரம் மற்றும் வல்லம் ஆகிய 40 சார்பதிவாளர் அலுவலகங்களின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான ஏரல், மேலப்பாளையம், பெருநாழி மற்றும் கொள்ளிடம் ஆகிய 4 அலுவலங்களுக்கு இதற்கென கண்டறியப்பட்டுள்ள தகுதியான இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

The post பத்திரப் பதிவுத்துறையில் 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,P. Murthy ,Dinakaran ,
× RELATED துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்