×

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.100 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல்

சென்னை: கடந்த 3ம் தேதி ஆடிபெருக்கு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி பொதுமக்களால் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் பதிவு செய்ய விரும்பும் அனைத்து ஆவணங்களுக்கும் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே உள்ள 100 முன்பதிவு வில்லைகளுடன் 50 முன்பதிவு வில்லைகள் சேர்க்கப்பட்டு 150 ஆக உயர்த்தப்பட்டது.

ஆவணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளத்தில் சொத்து தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் அதிக ஆவணப்பதிவு கொண்ட 100 அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 சாதாரண முன்பதிவு வில்லைகளும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளும் இணைய வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே உள்ள 100 முன்பதிவு வில்லைகளுடன் 50 முன்பதிவு வில்லைகள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைத்து பொதுமக்களுக்கும் முன்பதிவு வில்லைகள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைப்பதற்கு ஆவன செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.100 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adipperu ,Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Addiperu ,Audiper ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...