×

மானிய விலையில் உஜாலா கத்திரி குழித்தட்டு நாற்றுகள்: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த டில்லி என்ற விவசாயிக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணை ஈக்காடு கண்டிகையில் உற்பத்தி செய்யப்பட்ட கத்திரி உஜாலா குழித்தட்டு நாற்றுக்கள் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1.5 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ.30,000 மதிப்பில் 100 சதவீத மானியத்தில் 15,000 எண்ணிக்கையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு கத்திரி உஜாலா குழித்தட்டு நாற்றுக்களின் நடவு பணிகளை விவசாயி டில்லியின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அணி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது தோட்டக்கலை உதவி இயக்குனர் பூர்ணிமா, தோட்டக்கலை அலுவலர் அஸ்வினி பிரியா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் பெரியசாமி, செல்வகுமார், பரத் குமார், பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் உஜாலா கத்திரி குழித்தட்டு நாற்றுக்கள் மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பயன் அடையுமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அணி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மானிய விலையில் உஜாலா கத்திரி குழித்தட்டு நாற்றுகள்: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Thiruvallur ,Dilli ,Agaram ,Kadampathur, Tiruvallur district ,Ujala Kathri ,
× RELATED மேலும் விருத்தாசலம் காவல் துணை...